பக்கம் எண் :

274கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

50. மையல் தீர

ஒளி விடும் மின்னல் கண்ணாலே
இன்ப வானில் உன்னை நானே கூடிடுவேன்

(ஜிலு ஜிலு)

என்னைக் காணும்போது உள்ளம் துள்ளும்
தன்னாலே துன்பம் செல்லும்
என் இன்பமே தேன் மதுவாம்
மயில் போல ஆடும் என்னைப் போலே
பாரில் இனிமேலே மங்கையில்லையே!

(என்னைக்)

எழில் மேவும் மாதர் இல்லையென்றால்
இன்பம் இல்லை இங்கே
இவ்வுலகே பேரிருளாம்
மையல் தீர வாரும் இந்த வேளை
மாறும் இது நாளை - என்பதில்லையே!

(எழில்மேவும்)

(‘கண்ணாடி மாளிகை’ திரைப்படப் பாடல் -4)