51. முகக் கண்ணாடி காட்டிக் கொடுத்துவிடும் கண்ணாடி - முகம் காட்டிக் கொடுத்துவிடும் கண்ணாடி கருத்திலிருப்பதை மறைத்து வைக்காமல் (காட்டிக்) போட்டிருக்கும் வேடமதை மூடி வைத்தாலும் பொய் சொல்லும் வாய் தனைப் பூட்டி வைத்தாலும் (காட்டிக்) அயிரை மீனு பதுங்குது அங்கே குறவை ஒதுங்குது அந்த மீனும் இந்த மீனும் அகப்படத்தான் போகுது! கயிறு மேலே மிதக்குது மிதப்பும் அங்கே கிடக்குது கவ்விக் கவ்வித் தூண்டி முள்ளைக் கெண்டை மீனு இழுக்குது! (காட்டிக்) (‘கண்ணாடி மாளிகை’ திரைப்படப் பாடல் - 5) |