பக்கம் எண் :

276கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

52. பேதமேது?

ஆண்: நாணம் ஏனோ இந்த வேளையிலே - வண்டு
நாடி ஓடும் மலர்ச் சோலையிலே
நானும் நீயும் இந்த மாலையிலே
நல்ல நாதம் ஆவோம் காதல்வீணையிலே!

பெண்: காதல் வாழ்விலே கதிரென வந்தாய்
காணாத இன்பம் கண்டிடச் செய்தாய்!

ஆண்: கூடும் நமக்குள்ளே உருவம் வேறு - காதல்
கொண்ட நெஞ்சில் பேதமேது?

பெண்: பேதம் யாவுமே தீர்த்திட வந்தாய் - இந்தப்
பேதை நெஞ்சம் மலர்ந்திடச் செய்தாய்

ஆண்: நாணம் ஏனோ இந்த வேளையிலே - வண்டு
நாடி ஓடும் மலர்ச்சோலையிலே
நானும் நீயும் இந்த மாலையிலே

இருவரும்: நானும் நீயும் இந்த மாலையிலே
நல்ல நாதம் ஆவோம் காதல் வீணையிலே!

(‘கண்ணாடி மாளிகை’ திரைப்படப் பாடல் - 6)