பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை277

53. சிரிப்பதேனடி?

பார்த்துப் பார்த்துச் சிரிப்பதேனடி - பாங்கி
பக்கத்திலே அவள் வெட்குவதைக் காணடி

- (பார்த்துப்)

மேற்கில் செங்கதிர் சாயும் போதினிலே - மறைந்து
மெள்ள மெள்ள மெள்ள வந்து காதல் போதையிலே

- (பார்த்துப்)

கண்ணுங் கண்ணும் ஒன்றாய்ச் சேருதடி - அங்கே
காதலும் நாணமும் மீறுதடி
விண்ணும் மண்ணும் ஒன்றாய் ஆனதடி - அங்கே
வெண்மதி அல்லியை நண்ணிடவே முகத்தைப்

(பார்த்துப் )

(‘’கண்ணாடி மாளிகை’ திரைப்படப் பாடல் - 7)