பக்கம் எண் :

278கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

54. உதவுவையே

(கட்டளைக் கலித்துறை)

பெற்றார் உயிரென நட்டார் பெரியர் சிறியரெலாம்
கற்றா னிலை, சீ எனஎற் கடிந்தே இகழ்ந்துரைக்கச்
சற்றா கினுமதைத் தாளேன் சிறையில்நக் கீரனுக்கா
உற்றாய் தமிழினைப் பெற்றாய் கலைஎற் குதவுவையே.

(மாணவப் பருவத்தில் பாடியது)