பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்29

சுதமதி

நிலைமண்டில ஆசிரியப்பா

பூவும் பூவையும்

பல்வகை மலர்தொறும் பாடிப் பாடிப்
புல்லிதழ் அகமெலாம் ஞெகிழப் புக்குத்
தேறல் மாந்திச் சுரும்பினம் திரிதரும்,
ஆரல் பார்த்து நாரை தவஞ்செயும்
பொய்கை சூழும் பொதும்பர் அதனுள்
பெய்வளை ஒருத்தி பேணினள் செலீஇ
நறுமலர்ச் செடிதொறும் நாண்மலர் கொய்தனள்
திருமணம் பெறாஅச் சேயிழை; அவள்இடை
நிகர்த்தோம் நாமென நினைத்தஓர் பூங்கொடி
முகிழ்த்தநல் லரும்பால் நகைத்துச் செருக்கத்
தருக்கினை நோக்கிய தையல் முறுவலால்
தருக்கினை அடக்கித் தலைகொய் தனளே;
தாமரைப் பொய்கையுள் தளையவிழ் மலர்க்குக்
காமரு பொலிமுகங் காட்டினள்; அவ்வுழைப்
புரியவி ழாமுகைப் போதுகள் நோக்கலும்
கருவிளை விழியாள் கவிழ்த்தனள் தலையை;
இச்சிறு முகைக்கொரு ஒப்பிலை என்பால்,
என வாங்கு,
வெய்துயிர்ப் புறுங்கால் விம்மிய மார்பகம்
கண்டனள் களித்தனள் தண்டொடுந் திருகிக்
கொண்டனள் அம்முகை; கொவ்வைக் கனியைச்
சுவைத்தனள் அதுதான் துணையிதழ்க் கொவ்வாத்