30 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
தகைத்தென உமிழ்ந்தனள்; சாயல் நடைஎழில் காணலும் மயிலொடு அன்னங் கலங்கின பாணொலி கேட்டுப் பைங்கிளி குயிலொடு நாணின; இவ்வணம் நங்கை நின்றுழி, அவனும் அவளும் தொடுக்குந் தெரியல் தோளினன், சுடரொளி விடுக்கும் பொற்பூண் விடலை, பலர்தொழும் கடவுட் கோலக் காளை ஒருவன் தடமலர்ச் சோலையுள் தையலைக் கண்டனன் கண்டார்ப் பிணிக்கும் காரிகை எழில்நலம் உண்டான் விழியால், உலகின் அழகெலாம் ஓருருக் கொண்டிங் குற்ற தோவெனத் திகைத்து நின்றனன், நிலத்தை நோக்கினள், பதைத்தனள் நிமிர்ந்தாள், பார்வையைத் திருப்பினன், ஈரிரு விழிகளும் மாறி மாறி ஓரிரு முறையால் ஒன்றிக் கவ்வின; “நன்னுதல்! யார்நீ?” என்னலும் நாணினள்; பின்புறம் தொங்கும் பின்னல் கண்டவன் “என்னுயிர் பின்னினை எழில்முகங் காட்டி நின்வர லாறுரை நேரிழாய்?” என்னலும், “சண்பை நகரெனச் சாற்றும் இவ்வூர்ப் பண்பினன் வேதப் பார்ப்பன முதுமகன் அழலோம் பாளன் அன்பினன் கோசிகன் என்போன் மகள்யான் என்பெயர் சுதமதி” இம்மொழி செப்புமுன் இளையன் உணர்வால் கைம்மலர் பற்றிக் கனியிதழ் கொய்தான் செய்வகை யற்றுச் சேயிழை நின்றனள்; “வயங்கிழை மாதே வடபுலத் துறைவேன் பயங்கெழு பூம்புகார்ப் பதியில் நிகழ்வுறூஉம் இந்திர விழாவுக் கேகினன், வழியிடை முந்திய தவத்தால் முன்வந் துற்றனை! |