32 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
புதுவகைச் சுவையெலாம் பொருந்தப் பாடிக் காணா இன்பக் காதல் ஊட்டினள்; ஆணோ யாழில் அவலம் மீட்டினன்; மாருத வேகன் மாறின னாகக் காரிகை கலங்கினள்; “காதலி! இசையில் அவலம் காதல் அனைத்தும் சுவையே கவலை நினக்கேன்? கைவிரல் ஒட்டி மீண்டும் யாழினை மீட்டுதி கண்ணே! காண்டும் இன்பங் களிஉல கதனில்” என்றனன்; தோகை எடுத்தனள் யாழை; ஒன்றிய குரலால் உள்ளம் உருக அவலச் சுவையே அவளும் பாடினள்; திவவுக் கோல்யாழ் தெரிநரம் பிடையே சுவைசெய் சிறுவிரல் துடிப்புடன் தடவி முடிநிலை யுறுங்கால் முறிந்ததோர் நரம்பே; இடியொலி கேட்டெனத் துடியிடை நடுங்கி இதய நரம்புதான் இற்ற தோவெனப் பதறினள்; “அஞ்சேல் பாவாய்” என்றனன்; இருப்பினும் அவள்மனம் ஒருப்பட வில்லை; காதலும் கடவுளும் சிரிப்பினை யிழந்தனள் சிந்தையிற் கலக்கம் நிறைந்தனள்; அவளுறு துயரம் நீக்குவான் “அலையெழு புனலிடை மலைநிகர் மரக்கலம் பலவரூஉம் அழகினைப் பார்” எனப் பகர்ந்தனன்; “அலமரும் மரக்கலம் ஆகினேன் யான்” எனச் சிலைநிகர் அம்மகள் செப்பின ளாகப், “பலவகைச் செடிதொறும் பறந்து படிந்து மலரிடைத் தேன்நுகர் வண்டுகள் காண்” என, “அலர்தரு நறவம் அருந்திப் பிறிதொரு மலர்முகம் நோக்கும் வண்டினம் புரிசெயல் நின்னிற் றோன்றா தொழிகதில் அம்ம!” |