என்பதால் ஆங்கண் இருந்தனன்; அவளைப் பிரியா னாகிப் பிச்சையாற் புரந்து திரிவோன் ஒருநாள் தெருவரு புனிற்றாப் பாய்ந்திட ஆங்கே சாய்ந்தனன்; மகளொடும் மறைநூல் மாந்தர் வாழிடன் குறுகி உறைவிடம் வேண்டினன்; ஓதிய அந்தணர் `பிழைநடை யுடைய பேதை நின்மகள் உழைய ளாகலின் ஒதுங்கிடம் இலை, இது வேதம் பயிலிடம் விரைந்தே அகலுதி’ என்றனர் வேதியர்; இருவரும் பின்னர்ச் சமணப் பள்ளியைச் சார்ந்து ‘நும்சரண் இவண்எமக் கொருதுணை யில்லேம்’ என்றனர்; `புரிநூன் மார்பிற் பொலிவீர்! நீவிர் வேள்வி யியற்றி வேத நெறிப்படூஉம் ஆள்வினை உடையீர் ஆதலின் ஈண்டுப் புகுந்தக வில்லீர் முரணிய புன்மைகள் நுழைந்திடின் எம்நெறி பிழையுறும்’ என்று கையுதிர்த் தொதுக்கினர்; கலங்கிய முதுமகன் வெய்துயிர்த் தாங்கோர் வேற்றிடன் குறுகினன்; பாங்குறும் புத்தப் பள்ளியைக் காணலும் ஈங்குறல் சாலவும் ஏற்புடைத் தாகும் என்றுளங் கொண்டோன் மகளொடும் புக்குப் ‘பெரியீர் நும்சரண் பேதுற வுற்றோம் அருளீர் அருளீர் ஐயகோ அருளீர்’ என்றரற் றுரைக்க இரங்கிய சாரணர் ‘நின்துயர் துடைத்தோம், நீள்துய ருற்று நின்ற மகளொடும் வைகுதி’ என்றனர்; தப்பிய தன்மகள் சுதமதி தன்னொடும் புத்தப் பள்ளியில் புகலிடம் பெற்றனன்; பாலும் பிரையும் புகுந்த மறைநூல் புகல்நெறி யாளர்க்கு நெகிழ்ந்திடங் கொடாஅ நிலையின தாதலின் |