36 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
சமணக் கொள்கை தகவிழந் தழியப் பகையாய் மாறிப் பழிவாங் கினரே; புத்தமோ அவர்க்குச் சித்தம் நெகிழ்ந்தது கருணை ஒன்றே கருப்பொரு ளாதலின் முரணிய கொள்கை நெறியினர் தமக்கும் புகலிடம் தந்தது; புக்கவர் நண்பாய் நகுமுக முடையராய் நன்கனம் பழகினர்; காய்ச்சிய பாலிற் கலந்தது பிரையே புத்தமுந் திரிந்தது பூத்தநன் னிலத்தே! 212 (இஃது ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகிய மணிமேகலை தரும் செய்தியாகும். மணிமேகலையின் தோழி சுதமதி. இவள் வரலாறு மலர்வனம்புக்க காதையில் 29 முதல் 41 வரையிலுள்ள வரிகளில் காணப்படுகிறது. அதனை விரிவு படுத்தி, வேத நெறியால் சமணநெறிக்கும் புத்தநெறிக்கும் நேர்ந்த விளைவுகளையும் கூறுகிறது இந்தப் பாட்டு.) |