ஆற்றாலும் மலையாலும் சோலை யாலும் அழகுசிரித் தாடுகின்ற நாட்டில் வாழ்வீர்! சோற்றாலே துயருறுவோர் தமிழர் என்னும் சொற்கேட்டுத் துடித்திலதோ உங்கள் உள்ளம்? மாற்றாரின் காலடியில் நாட்டை விட்டீர்! மடிகின்றீர்! இக்கேட்டை அழிக்கும் எண்ணம் தோற்றாதோ உங்களிடம்? அடிமை வாழ்வு தொலையாதோ? அழகிங்கே சிரிப்ப தென்றோ? 8 இயற்கை உலகம் (கோவையில் 1950 மே 27, 28 தேதிகளில் பாவேந்தர் பாரதிதாசனார் தலைமையில் நடைபெற்ற முத்தமிழ் வளர்ச்சி மாநாட்டுக் கவியரங்கில் முதற் பரிசில் பெற்றது.) |