பக்கம் எண் :

48கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

முகிலென்னும் துகிலுடுத்து நாணம் ஓங்க
        முகம்மறைத்துச் செல்கின்ற பெண்ணென் பேனோ?
நகில்கொண்ட அல்லிப்பெண் முகம லர்ந்து
        நகைகாட்டப் பிறரெவரும் அறியா வண்ணம்
பகல்மறைந்து முகில்நுழைந்து செல்லு கின்ற
        களவொழுக்கத் தலைவனெனப் பகரு வேனோ?
மிகுவிண்மீன் வயிரங்கள் கொள்ளை கொள்ள
        முகில்பதுங்கும் திருடனென விளம்பு வேனோ? 8