பக்கம் எண் :

56கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

ஒருதுறையில் ஆண்பாலர் மற்றோர் பக்கம்
        உயர்மாதர் நீராடும் காட்சி யைப்பார்!
கருமுகில்வந் தமர்ந்ததுபோற் கிடந்த யானை
        கழுவுகின்ற பாகனையும் அவனைச் சூழ்ந்து
சிறுவர்பலர் நீரிறைத்தே ஓடி ஆடிச்
        செய்குறும்பும் காணடிநீ! இந்த ஆற்றில்
ஒருசாதிக் கொருதுறையுண் டென்ற கொள்கை
        ஒழிந்ததையும் பாரடிநீ! செல்வோம் வாவா! 16

(காரைக்குடி, கம்பன் திருநாள் கவியரங்கில் திருப்பெருந்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் பாடப்பெற்ற பாடல்)