60 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
கடலுக்குள் வலைவீசி மீன்பிடிக்கக் காதலனை வழிய னுப்பிக் குடிலுக்குள் அவன்வரவை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் மங்கை யுள்ளம் துடிதுடித்துக் குமுறுவதைப் போல்நீயும் துடிக்கின்றாய்! குமுறு கின்றாய்! கடனுக்கோ? அன்றியவள் துன்பத்தைக் கண்டோ?நீ உண்மை சொல்வாய்! நீலமணிக் கடற்கப்பால் கீழ்வானில் நெடுங்கதிரோன் செந்நி றத்தைக் கோலமுடன் பூசுவதைக் கண்டேன்நான் குதித்தெழுந்து கடவுள் என்றேன்; ஞாலமூளார் நாத்திகமாம் என்கின்றார் நானதற்குச் செய்வ தென்ன? வேலையிலார் சொல்லுக்குச் செவிசாய்த்தா வேலைகளைச் செய்கின் றாய்நீ? 13 |