68 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
3. காதல் உலகம் காதல் நெஞ்சம் நேரிசை வெண்பா அவன் :- கொல்லும் விழியுடையாய்! கொவ்வைக் கனியிதழாய்! அல்லும் பகலுமுன் அன்புபெற - அல்லற் படுமென்னை உள்ளத்தாற் பாராயோ? ஆவி சுடுதுயரைத் தீராயோ? சொல்! உள்ளப் பெருநிலத்தில் ஓங்கிப் படர்வகையில் அள்ளித் தெளித்துவிட்டாய் அன்புவிதை - கிள்ளிப் பறித்தெறியப் பாடுபட்டேன் பாழாயிற் றே!என் குறிக்கோளாய் வாழ்வாயோ கூறு! நண்பர் பலசொன்னார்; நான்மறக்க ஒல்லுவதோ? கண்ணுள் மணியாய்க் கலந்துவிட்டாய்! - பண்ணும் பனுவலுமென் றாகிவிட்டாய்! பாவிஎனைச் சேர மனமிலையோ? சொல்லிடுவாய் மற்று. |