பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்71

புதருள் கனி

உருத்தெழுந்த மார்பகத்தாள்,
    வில்லொடித்த புருவத்தாள்,
    உள்ளத்தே தைத்தோடிப்
    பாய்கின்ற வேல்விழியாள்,

கருத்தெழுந்த மேகத்தைப்
    புறங்கண்ட கரிகுழலாள்,
    கன்னத்தில் அழகொளியாள்,
    அன்னத்தின் எழில்நடையாள்,

சிரித்தெழுந்த செவ்விதழாள்,
இன்மொழியாள், அழகெல்லாம்
சேர்த்தெழுந்த உடலுடையாள்,
அவளைக்கண் டென்மனத்தை

மறுத்தெழுந்த ஆர்வத்தால்
    யாரென்றேன் விதவைஎன்றாள்;
    உன்மத்த நிலையடைந்தேன்

அச்சச்சோ! அவள்நுகர
    முடியாத மலரானாள்!
    அகங்கவரும் எழில்கொண்ட
    சிலையானாள்! கோழைமன

அச்சத்தார் முட்புதராம்
    அதனடுவே கனியானாள்!
    ஆவலெலாம் பாழன்றோ!
    இளம்பருவ எழில்நிறைந்த