பக்கம் எண் :

72கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

பச்சைமயில் இவளன்றோ!
    பாவையிவள் நாள்முழுதும்
    பதியின்றித் துயருறவோ!
    அறமிதுவோ! விதவைஎனும்

கொச்சைமொழி இல்லாமல்
    செய்திடுவேன் என்றுறுதி
        தெனவினவக், கோதையவள்

சிந்துகின்ற நீர்துடைத்து
    விருப்பந்தான் ஆனாலும்
    சீறிடுவர் உறவினர்தாம்
    சாதியினில் ஒதுக்கிடுவர்

நிந்தனைகள் பேசிடுவர்
    நீறாகிப் போகாதோ
    நேர்மையற்ற சட்டமெலாம்

நொந்துழலும் என்னிலையை
    அறியாது பெற்றோரும்
    நோயென்று செப்புகின்றார்
    செய்வதெதும் நானறியேன்

இந்தநிலை உள்ளளவும்
    எப்படிநான் ஒப்பிடுவேன்
    என்றுருகிச் சொல்லிவிட்டு
    முகமாறிப் போய்விட்டாள். 3

(இப்பாடல் உண்மைப் படப்பிடிப்பு.
எண்சீரில் புதிய வடிவம்.)