78 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
மற்றவர்கள் சொல்வதெலாம் கருதா தென்றன் மனம்விரும்பி மணமுடிக்கத் துணிந்து விட்டேன் கற்றவரும் மற்றவரும் சினந்து நோக்கக் கைபிடித்தேன் பதிவுசெயும் தலைவர் முன்னே; உற்றார்கள் ஊரார்கள் உறுமி னார்கள் “ஒவ்வாதே சமுதாயப் பண்புக்” கென்று சொற்றார்கள் “சாதிகுலம் போச்சே! இந்தச் சொல்லரிய கொடுமையினை எங்குக் கண்டோம்!” என்றார்கள் அவ்வளவில் விட்டா ரோ?இத் தெருவதனில் இருப்பதுவுங் கூடா தென்றார்; கொன்றாற்போற் கொடுமைபல செய்தார்; மேலும் குடும்பத்தில் நிகழ்கின்ற நன்மை தீமைக் கென்றாலும் அழைப்பதில்லை; வறுமை நோய்வந் திடர்படுத்தக் கடன்கேட்டேன் கொடுத்தா ரில்லை “நன்றப்பா கலப்புமணம்” என்று சொல்லி நகைத்தார்கள் பகைத்தார்கள் உள்ளம் நொந்தேன்; “காதல்மிகு வாழ்வினையே முன்னோர் கண்டார். கண்டதிலை சாதிமுறை, உயர்வு தாழ்வு ஓதவிலை, சங்கத்து நூல்கள் சான்றாம் உணர்ந்திடுவீர்” என்றுரைப்பர்; தலைய சைப்பர்; காதல்மணம் கலப்புமணம் செயலிற் காட்டக் கருதிடினோ கரடிபுலி யாக மாறித் தீதிழைப்பர் ஊரார்கள்; பேச்சில் மட்டும் தீரரவர் செயலென்றால் அஞ்சிச் சாவார்; நாட்டுநிலை என்வருவாய் துணைவி மேனி நலமறிந்து நான்கைந்தாண் டான பின்னர் வீட்டினிலே என்பிள்ளை தவழ்ந்து பேசி விளையாட நினைத்திருந்தேன்; சாதி மாறி, நாட்டாரும் விரும்பாத, கடவுட் கொவ்வாச் செயல்புரிந்தான் நாத்திகத்தின் வழியிற் சென்றான் கேட்டானா நம்முரையை? பிள்ளைப் பேறு கிடைத்ததுவா? கடவுள்செயல், என்றார் ஊரார். |