பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்79

நல்லுடையால் அணிசெய்து மாலை வேளை
    நானவளை உடனழைத்துப் பூங்கா செல்வேன்;
வில்உளத்து மாந்தர்சிலர் மனம்வி யர்ப்பர்;
    வினைவிதைப்பர்; அருகிலுளோர் செவிக டிப்பர்;
நல்லதுவோ அழுக்காறு? வறுமை மிஞ்சி
    நலிவுறுத்த நல்லாடை இலையேல் இந்தப்
பொல்லாதார் அப்போதும் விடவே மாட்டார்
    புல்லனென்று கஞ்சனென்று புகல்வர் அன்றோ?

ஊராருள் இத்தகையர் இருப்பி னும்நல்
    உள்ளத்தார் ஓரிருவர் இருப்ப துண்மை;
நேராரும் விழைகின்ற ஒழுக்கம் வாய்மை
    நேர்மையெனும் கொள்கையினர், மடமைக் கூட்டம்
சேராதார், சீர்திருத்த நோக்கங் கொண்டார்,
    செப்புவதைச் செய்திடுவார், ஊரார் கூற்றைப்
    பக்கமிருந் துடன்பிறந்த அண்ணா வானார்

காதலனைக் கோவலனை மதுரை வேந்தன்
    கள்வனெனக் கொலைசெய்தான் என்று கேட்டு
வேதனையில் மூழ்கிஉயர் செல்வ வாழ்வை
    வெறுத்துமணி மேகலையும் தானும் தூய
மாதவனைச் சார்ந்துமனத் துறவு பூண்ட
    மாதவியை ஊரார்கள் தூற்றி னார்கள்
கோதுரைகள் செவிவிழுந்தும் புறக்க ணித்தாள்
    குறிக்கோளில் வென்றிகண்டாள் கற்பின் செல்வி

“என்னோடு சினந்தில்லாள் அயலான் வீட்டில்
    இருந்ததனால் மனமொப்பி அவளை மீண்டும்
என்னோடு வாழவிடேன் மானம் மேலாம்”
    இவ்வண்ணம் ஊராருள் ஒருவன் அங்குச்
சொன்னான்அவ் வுரைகேட்டி ராமன் “என்னைச்
    சுட்டினனோ? கடலிலங்கைச் சிறையி ருந்த
மின்னாளைக் கொடுவந்தேன்” எனவ ருந்தி
    மீண்டுமவள் வெங்கானம் போக விட்டான்