8 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
“..................தன்பால் செ ந்தா மரையின்றி முகங்காட்ட முடியா ஆறு மாள்வதற்குக் கடல்நோக்கி ஓடு தல்பார்” என்று. ஓடும் நீரிலே தாமரை பூக்காது என்ற உண்மையை எவ்வளவு அழகான கற்பனையின் கருவாக்கிக் கொண்டார் ஆசிரியர். கம்பனையும், பாரதியையும், பாரதிதாசனையும் வைத்துக் கொண்டு, பார்த்துப் பார்த்துக் கவிதைப் பாடி, அவர்களின் கருத்தையும் வரிகளையும் சேர்த்துச் சேர்த்துச் செய்யுள் எழுதும் சில `கரும வீரர்’களும் இந்த ஆற்றைப் போல் முகங்காட்ட முடியாமல் ஓடுவதைத் தான் நாம் காண்கிறோம். “ கால்முளைத்த தாமரையின் மொக்குகள் போலக் காட்சிதரும் குஞ்சுகள்” கோழிக்குஞ்சுகளின் உருவத்திலே மட்டுமன்று, கவிதையிலும் நெளிவு, உவமையிலும் புதுமை. ஆம், ஒவ்வொன்றும் கவிதை. “இயற்கைத் தாய்” அற்புதமான படைப்பு; யாரும் கற்பனை செய்யாத கவிதை. வாழும் நாட்டிலே பிறந்த கவிஞன், நாட்டின் வளத்தையும் நலத்தையும் பாடுவான். சங்க இலக்கியம் அதற்குச் சான்று. அல்லற்பட்டு அவதியுறும் நாட்டிலே வாழும் கவிஞன் ஆனந்தப் பண்பாட மாட்டான். குமுறும் நெஞ்சம் எரிமலையாக, கொதிக்கும் குருதி கொடுவாளாக, பெருமை குறைவது கண்டு பெருமூச்சு விட்டுக் கருத்தற்ற மக்களைக் கண்டு கண்ணீர் விட்டுப் பாடுவான். அவன் குரலிலே சோகம் இருக்கும். கவிதையிலே கனவிருக்கும். கருத்திலே எழுச்சியிருக்கும். ஏன்? கவிஞன் காலங்காட்டும் கண்ணாடி என்கிறார்கள். அந்தக் கண்ணாடியிலே உண்மை உருவம் கண்டால், தங்கள் உருவம் தெரிந்தால் `பிரச்சாரம், அரசியல்’ என்று மழுப்பிக் கவிஞனைக் குறைத்து மதிப்பிடவும் துணிகிறார்கள். இத்திறனாய்வுப் பெரியோர்கள் நல்லது செய்யத் தெரியாவிட்டாலும், அல்லது செய்யாமல் அடங்கியிருக்கலாம். `சங்க இலக்கியம் ஒரு வாழைத் தோட்டம்’ என்கிறார் முனைவர் மு.வ. அத்தோட்டத்தில் வாழையடி வாழையெனப் பாரதியைப் போல, பாரதிதாசனைப் போல முடியரசன் தோன்றி யுள்ளார். இளம் வாழை, இனிக்கும் வாழை, ஈனும் வாழை |