பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்9

இவ்வாழை. நல்ல எண்ணமும் நாட்டன்பும் கொண்டவர்க்கு நல் விருந்து, குடிகெடுக்கும் சூது மதியினர்க்கு நல்ல மருந்து இவ்வாழை. ஏன்? வண்ண நிலவை, வளர் கரும்பை, தெவிட்டாத தேனை, தித்திக்கும் கற்கண்டை, நலம் வளர்க்கும் மலை வாழையை தீந்தமிழை உண்ண வருக என்று இதுவரை யாரும் சிபாரிசு செய்ததில்லை. அதனால்,*

II

மொழி அறிவு வாய்க்கப் பெற்றுத் தமது ஆழ்ந்த உணர்ச்சி களைப் பிறர் மனத்தில் நிகழ வைக்கும் ஆற்றலும் வாய்த்திருந்தால் ஒருவர் கவிஞராகத் திகழுதல் கூடும்.

இவ்விரண்டினுள் ஏதேனும் ஒன்று மட்டும் இருந்துவிட்டால் போதாதா என்று துடிதுடிப்பவர்கள் உளர்; அவர்கள் குழந்தை பெறுவதற்கு மனைவிதானே இன்றியமையாதவள், கணவன் எதற்கு? என்று கேட்பவர்கள். கவிஞர் முடியரசன் தமிழ் இலக்கிய இலக்கணங்களை முறையாகப் பயின்றவர்; தம் வாழ்வை ஆழ்ந்த உணர்ச்சிகளின் கோவையாக்கி, அதனால் தமது மனத்தை மிக்க மென்மையும் நுண்மையும் உடையதாக்கிக் கொண்டவர். பிறருடைய உள்ளத்தில் தம்முடைய உணர்ச்சிகளை எதிரொலிக்க வைக்கும் இணையற்ற ஆற்றலும் வாய்த்தவர்; இதனால்தான் இவரைப் `புதுமைக் கவிஞர்’ என மக்கள் போற்றுகிறார்கள். இவரது கவிதை களைத் தமிழ்க் கருவூலத்திற்கு முடியரசர் தந்த காணிக்கை எனப் புகழ்கிறார்கள்.

III

“எம்மைப் போலக் கவிஞரும் உளரோ?” எனச் சிலர். எழுதப் புறப்படும்போதே கேட்கிறார்கள். அவர்கள் கேள்வியில் உண்மையும் இருக்கிறது.

பொதுவாக, கவிஞனுக்கு `இலக்கியப் பரம்பரை உணர்வு’ ஒன்று வேண்டும். எத்தனை எத்தனையோ நூற்றாண்டுகளாக வருகின்ற கவிஞர் பரம்பரையிலே தானும ஒருவன் என்ற எண்ணம் வேண்டும். பழைய `மரபுகளை’ வெட்டிச் சாய்க்கப் புறப்படாமல் ஒட்டிக் காக்க முற்படுகிற பழக்கமும் வேண்டும்.


*இதுவரை முதற்பதிப்பின் மதிப்புரையாக 1954-ல் வெளிவந்தது. பின்வரும் பகுதிகள் இரண்டாம் பதிப்பிற்கு எழுதியன.