தேன்சுளையே! அங்கெல்லாம் இனிமேற் செல்லேல் தேர்ந்தெடுத்துப் பணியாளொன் றமைப்பேன் என்றன் மான்விழியே! அடுக்களையும் விடுத்து வந்து மகிழ்ந்திருப்போம் எனப்புகன்றேன்; ‘நானி ருக்க ஏன்பணியாள்? நன்றத்தான் உங்கள் எண்ணம்! எழுந்தோடிக் காய்நறுக்கி உங்கட் கென்று நான்சமைத்துப் பரிமாற, நீங்கள் உண்டு, நன்றுநன்று சமையலெனக் கூறும் போது நான்காணும் இன்பத்துக் குவமை யுண்டோ? நம்மன்பிற் கிடையூறாம் பணியாள் வேண்டாம்; ஊன்பெருத்தே உதியமரம் ஆக மாட்டேன், உலைவாயை மூடவொரு மூடி யுண்டு கூன்காணும் உள்ளத்தார் ஊரார் வாய்க்குக் குவலயத்தில் மூடியிலை ஆத லாலே தேன்காணும் இசைபாடி என்றும் போலத் திகழ்ந்திடுவோம் வாருங்கள் அத்தான்’ என்றாள். 5 |