84 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
சிற்றூர்ச் செலவு எண்சீர் விருத்தம் பட்டணத்தில் என்மனைவி பிறந்து வாழ்ந்தாள்; பகலுணவு முடித்துப்பின் படுத்தி ருந்தேன் தட்டெடுத்து வெற்றிலையை மடித்தெ டுத்துத் தந்தின்பம் சேர்த்திருந்தாள், பாளை நீக்கி விட்டெழுந்த நகைஉதட்டைப் பற்றி “நாளை விடியலுக்குள் என்னூர்க்குச் செல்வோம்” என்றேன்; “கட்டழகி எனச்சொல்லிக் கட்டி முத்தம் கணக்கின்றித் தந்தாலும் வாரேன்” என்றாள் ஏன்’ என்றேன் `பட்டிக்கா’ டென்று ரைத்தாள்; `என்னைஉனக் களித்துள்ள அன்னை வாழும் தேனெனவே இனிக்கின்ற என்றன் ஊரைத் தீதுரைத்தாய் அதனலத்தை உணரா திங்கே கானுண்டோ? உணவுவிளை களந்தான் உண்டோ? காக்கின்ற தாயகத்தைக் காண எண்ணி நானுன்னை அழைக்கின்றேன் வருக!’ என்றேன் `நடப்பதற்கு முடியாதே’ என்றாள்; பின்னர் எப்படியோ ஒருப்பட்டாள் விரைந்து செல்லும் புகைவண்டி ஏறிப்போய் ஊரை நோக்கித் தப்பெதுவும் நேராமல் நடந்து சென்றோம்; தழைத்துள்ள வயல்வரப்பில் நடக்குங் காலை “அப்பப்பா நல்லவழி” என்று சொல்லி அகம்நொந்து முகஞ்சுழித்து நடந்து வந்தாள்; `இப்படிவா’ என்றவள்கை பற்ற `ஐயோ!’ என்றழுதாள் என்னென்று பதறிக் கேட்டேன். |