மென்காலில் முள்தைத்த தென்ன, நெஞ்சில் வேல்குத்திக் கிழித்ததுவே றொன்றும் பேசா தென்காதல் மிகுதியினால் குனிந்து முள்ளை எடுத்தவளை வருந்தாதே மன்னிப் பாய்நீ என்மீது சினந்தனையோ? இனிமேல் இங்கே வருமெண்ணம் இல்லைஇல்லை என்றேன்; பாவை “என்னென்ன சொல்லுகிறீர் அத்தான் நீங்கள் இருக்கின்ற இடமேதான் இன்பப் பூங்கா!” என்றெழுந்து நின்றுகொண்டாள் ஒடிந்த உள்ளம் இனிதுமகிழ்ந் தெழுந்துவழி நடந்தேன் பின்னர் குன்றனைய தோள்பற்றிக் கெந்திக் கெந்திக் குளிர்மொழியாள் நகையாடி நடந்தாள்; கண்ணே! இன்றெனது மனம்நொந்து பதறி விட்டேன் என்றவுடன் “ஆடவரே அப்ப டித்தான் ஒன்றுமிலா தஞ்சிடுவார்” என்று சொன்னாள் உள்ளங்கள் பரிமாறிச் சென்றோம் மேலும். 5 |