86 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
எந்நாளோ? எண்சீர் விருத்தம் மனையாளை இல்லிருத்தி மாலை ஓர்நாள் மனஅமைதி பெறஎண்ணிச் சென்றேன்; நல்ல `சினிமா’என் றுரைத்தார்கள்; அதனால் நானும் சிறிதெண்ணி உட்புகுந்தேன்; தொடங்கி னார்கள் மனநிலையை முகக்குறிப்பால் உணர்த்தும் அந்த மங்கையைப்போல் நடிப்புலகில் கண்ட தில்லை! அனநடையும் அவள்குரலும் படப்பி டிப்பும் அத்தனையும் புகழ்ந்தார்கள் ஆங்கி ருந்தோர் கலையுண்டு நடிப்புண்டு நடன முண்டு கண்கவரும் அழகுண்டு; நெஞ்சை அள்ளும் நிலையில்லை பேச்சொன்றும் புரிய வில்லை நினைப்பெல்லாம் எங்கெங்கோ சென்ற தங்குச் சிலைஎன்ன இருந்தஎனை மணியின் ஓசை செவிபுகுந்து கிளப்பிற்று வீடு சென்றேன்; `தலைவலி’என் றுரைத்தேன்நான்; `என்னை விட்டுத் தனியாகச் சென்றீரே வேண்டும்’ என்றாள் “இல்லையடி! புரியாத மொழிப்ப டத்தை இனிதெனநான் பார்த்ததனால் வந்த நோவு! நல்லஇயல் தமிழ்மொழியின் நிலையை எண்ணின் நைந்துருகிப் போகுதடி எனது நெஞ்சம்; சொல்லரிய தாய்மொழியைப் பிழைகள் நீக்கிச் சொல்லறியா எழுதறியாத் தமிழர் நாட்டில் புல்லறிவால் பிறமொழியர் படத்தை ஏனோ புகுத்துகிறார்? என்னென்பேன் அவர்தம் போக்கை |