படம்பிடிக்கும் கூட்டத்தார் தகிடு தத்தம் பண்ணுகிறார்; அறிவிருக்க அன்னார் மூளை இடங்கொடுக்கும் நாளென்றோ? கலையும் வாழ்வும் இணைந்திருக்கும் படங்காணும் நாள்தான் என்றோ? மடமையினைத் தொலையாரோ?” என்றேன்; “பேச்சு மடைதிறந்து விட்டீரோ? உறங்கும் நேரம் கடமையினைச் செய்திடுவீர்!” என்றாள்; தூக்கம் கண்கவ்வ அவளென்னைக் கவ்விக் கொண்டாள். 4 |