88 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
குளிர் நிலா நேரிசை ஆசிரியப்பா திருமணம் என்ற தேன்மொழி என்றன் செவியில் வார்த்தான் சிறிய தம்பி; அவர்தான் எத்துணை அழகோ! என்னை அணைத்தணைத் தின்பம் அருத்துவர், பின்னர் எழிலுறு மழலை இன்பக் குழவி என்கைத் தருவார், இன்பம்! இன்பம்! எனமனக் குதிரை ஏறிச் சென்றேன்; கண்ணே என்றார் கடிதினில் திரும்ப அவரே நின்றார்; அத்தான் என்றேன், இன்பச் சூட்டால் இறுக அணைத்தார், இதழைக் கொய்தார், எடுத்துச் சொல்ல இயலா நிலையில் இருந்த என்னைத் தெரியா உலகம் தெரியச் செய்தார், அடடா இன்ப ஆற்றினில் மிதந்தோம், கரையே இல்லை காதல்! காதல்!! அணைப்பால் மட்டும் ஆறுதல் இல்லை, துணைவர் தந்த தோள்தோய் இன்பச் சின்னம் இல்லை; செருநரும் விழையும், செயிர்தீர் செல்வன் சிந்தும் சிரிப்பை அள்ளிப் பருக அவாவிற் றுள்ளம்; இளம்உடல் தீண்ட இன்சொற் கேட்கத் |