92 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
என்றுரைத்தேன்; “போங்களத்தான்!” என்று சொல்லி எழுந்தோடி ஓர்புறத்தே ஊடி நின்றாள்; சென்றழைத்தேன் திரும்பாமல் “ஊஹும்” என்றாள்! “செவ்விதழாய்! ஏனிந்தக் கோபம்?” என்றேன்; “நன்றுநன்று தாழ்வென்றீர் என்னின் பத்தை! நானெதற்காம்?” எனப்புலந்தாள்; முகத்தைத் தொட்டேன் கன்றியகண் ணீர்சிந்தப் பதறி விட்டேன் கதறியழும் மகவொலியால் விழித்துக் கொண்டேன். 8 |