பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்95

முகில்விடு தூது

கலிவெண்பா

வான வெளியரசே! வள்ளல் பெருமனம்போல்
தானம் பொழிகின்ற தண்முகிலே காற்றைப்

புரவியெனக் கொண்ட புரவலனே! எங்கே
விரைகின்றாய்? ஒன்று விளம்புகின்றேன் சற்றேநில்!

ஈர மனமுடையாய் இவ்வுலகில் எப்பொருளும்
சோர விடமாட்டாய் என்றுன்னைச் சொல்கின்றார்

சோரவிடாய் என்னுந் துணிவால் மொழிகின்றேன்
ஆர அமர அரிவையுரை கேட்டிடுவாய்!

அன்றொருநாள் என்துணைவர் ஆற்றிப் பிரிந்து சென்றார்
இன்றுவரை அஞ்சல் எழுதவில்லை; நாடோறும்

அஞ்சலார் இவ்வழிதான் ஏகிடுவார் ஆனாலும்
வஞ்சி எனதகத்து வாயிற் படிமிதியார்

கற்றைகற்றை யாக்கடிதம் கையில் குவிந்திருக்கும்
பற்றாக் குறைக்கந்தப் பையிலொரு கூடையுண்டு

ஐயா பெரியவரே அஞ்சலுண்டோ? என்பேன்நான்
கையால் விரித்துரைப்பார் கண்கலங்கி நின்றிருப்பேன்;

எத்தனைநாள் இப்படியே இன்னலுற்றுச் செத்திடுவேன்?
மெத்தவுனை வேண்டுகிறேன் மேவியிதைக் கூறிடுவாய்

வாடகை கேட்டுமிக வாட்டுகிறார் வீட்டார்கள்,
தேடறிய கல்வி தெரிவிக்கும் பள்ளிக்குச்