பக்கம் எண் :

96கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

சம்பளம் வேண்டுமென்று சாற்றுகின்றான் என்பிள்ளை;
கம்பளம் விற்றுக் கடன்கழித்தேன்; கையிருப்போ

ஒன்றுமிலை; இத்தகைய ஊறு மிகவருத்தக்
கன்றியுடல் உன்போல் கருத்தேன்; விழிசிந்தும்

நீர்த்துளியோ நின்னைப் புறங்கண்டு விட்டதுபோல்
ஆர்த்து மிகுகின்ற தையாவோ! என்னவரைக்

காணின் அருள்கூர்ந்து காசனுப்பச் செப்பிடுவாய்;
ஆணி இருந்தால்தான் அச்சுவண்டி மேலோடும்;

மெய்யில் உயிர்நிற்க வேண்டுமெனில், பள்ளிசெலும்
பையன் பயில்கின்ற பாடம் வளரவெனில்

காசுபணம் வேண்டுமெனக் காதலர்பால் நெஞ்சுணர்ந்து
பேசு; பிழையாகப் பேசி வருத்தாதே,

காதல் முகந்தன்னைக் கண்டு பலநாள்கள்
ஆதல் அவரறிவார்; ஆசைக் கணவரைத்தான்

கண்டு மகிழ்வுபெறக் கண்துடிக்கும் செய்தியையும்
விண்டு திரும்பு விரைந்து. 36