பக்கம் எண் :

98கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

பேர்சொல்லி எனை அழைப்பர்; கற்றோன் தன்னைப்
    பெருந்துணையாக் கொளநினைந்தேன்; ஆனால் கல்வி
சீர்தளைகள் ஏதொன்றும் அறியாத் தீய
    சிறுமகன்வந் தென்னருகே சுற்று கின்றான்

நான்விரும்பாக் குறிப்புணர்ந்து விலகா னாகி
    நரிச்செயலால் வன்முறையால் நாடு கின்றான்
கூன்விழுந்த செய்திஇதழ்ப் பொறுப்பை ஏற்ற
    கொடுமனத்தர் அவனுக்கே உடந்தை யானார்;
நான்விழைந்த கலைஞனையோ புறக்க ணிப்பாம்
    நங்கைக்குத் துணையாக்கி மகிழ்தல் கண்டேன்
ஏன்பிறந்தோம் இவ்வுலகில் எனநி னைந்தே
    இரங்குகிறேன் காதலிழந் தேங்கு கின்றேன்.”

செல்வமகள்

கவியணங்கின் துயருரையைச் செவிம டுத்துக்
    கலங்குகிற பொழுதிலொரு நங்கை வந்து
“செவிமடுப்பாய் என்னுரையும்” என்று கண்கள்
    சிந்துகிற நீர்துடைத்தாள்; சொல்க என்றேன்;
“புவியரங்கில் செல்வமெனப் புகல்வர்” என்னை,
    புரட்சிசெயும் எழுத்தாளன் தனைம ணந்து
தவிமனத்துக் காறுதலைத் தரநி னைந்தேன்
    தப்பியதால் என்காதல் துயரங் கொண்டேன்

அவனுக்கோர் பெண்பார்த்தார் வறுமை என்னும்
    அரிவைதனை மணமுடித்தார் துயர்கொ டுத்தார்;
தவறுக்கே தலைமகனாய்ப் பொய்கள் சொல்லித்
    திருடுவதே தன்தொழிலாய்த் திரியும் தீயன்
இவறுகின்ற ஒருமகன்வந் தெனைக்க வர்ந்தே
    இல்லறத்தில் வாழ்வதற்கு மிகவி ழைந்தான்
சுவருக்குள் வைத்திருந்து காக்கின் றான்நான்
    சுவைக்கின்ற காதலிழந் தேங்கு கின்றேன்