பக்கம் எண் :

10கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

தமிழைக் கோவிலுள் தடுத்திடும் பகையைத்
தவிடெனப் பொடியெனச் செய்திடல் வேண்டும்
தமிழன் என்றொரு இனமுண் டாயின்
தயங்குவ தேனோ? எழுவீர்! எழுவீர்!

-ஆண்டவன்

நாமிடும் சோற்றினை ஒருநாள் உண்ட
நாயும் நன்றியை மறவா தன்றோ?
பூமியில் தோன்றிய நாள்முதல் உண்டோர்
புன்மைகள் செய்திட முனைவதும் நன்றோ?

-ஆண்டவன்