பக்கம் எண் :

காவியப் பாவை9

5
தயக்கம் ஏன்?

-

எடுப்பு

ஆண்டவன் வெறுத்தாரோ? - தமிழை
அன்பர்கள் தாம் மறுத்தாரோ?

-ஆண்டவன்

தொடுப்பு

வேண்டிய எண்ணங்கள் விளம்பிடத் தாய்மொழி
விடுத்தொரு பிறமொழி விழைவது முறையோ?

-ஆண்டவன்

முடிப்பு

நெஞ்சை உருக்கும் திருவா சகநூல்
நினைக்க இனிக்கும் தேவா ரங்கள்
அஞ்சலி செய்திட உதவா என்றால்
அந்தநல் ஆத்திகம் வேண்டாம் இங்கே

-ஆண்டவன்

இந்தநன் னாட்டார் எடுத்தது கோவில்
இருப்பதும் அருச்சகர் தமிழகக் காவில்
வந்திடும் மொழிக்கோ வளர்ந்திடும் வாழ்வு
வாழ்ந்தநம் மொழிக்கோ வந்தது தாழ்வு

-ஆண்டவன்