பக்கம் எண் :

8கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

-மொழி

4
தமிழில் பாடு!

-

எடுப்பு

பாடுவ தென்றால் தமிழினில் பாடு
பாவையே உளமகிழ் வோடு!

-பாடு

தொடுப்பு

வாடிடும் என்மன வேதனை தீர்ந்திட
வாழ்வு மலர்ந்திட அன்பு நிறைந்திடப்

-பாடு

முடிப்பு

வையம் பெற்றது தமிழ்மொழியாம் - அதன்
வழி வழி வந்தன பிறமொழியாம்
ஐயம் இல்லை உண்மையிதாம் - கண்ணே
அருமைத் தமிழே நமதுயிராம்

-பாடு

இடுக்கண் வருங்கால் சிரித்திடுவாய் - மன
இழுக்கெனும் மாசுகள் துடைத்திடுவாய்
வடுக்கள் நீங்கிட வாழ்ந்திடலாம் - என
வள்ளுவன் சொன்னதைப் பாடிடுவாய்

-பாடு

நன்மைகள் செய்ய முயன்றிடுவாய் - இன்றேல்
நலிவுகள் செய்திட முனையாதே
என்னும் மேலோர் அறவுரையை - நல்ல
எழிலொடு காதலை வீரமதைப்

-பாடு