3 உயிர் வெல்லமோ? - எடுப்பு மொழிவளம் பெற முயல்வாய் - தமிழ் முதலிடம் பெறின் நீ உயர்வாய் உயர்வாய் -மொழி தொடுப்பு விழியினும் மேலென விரும்பிட வேண்டும் வெறுத்திடும் செயலினை ஒழித்திடல் வேண்டும் -மொழி முடிப்பு இயல்இசை கூத்தெலாம் இலங்கிடக் கூடுவாய் எதிர்ப்பொன்று கண்டால் எழுந்ததைச் சாடுவாய் முயல்வந் தெதிர்த்தால் முரண்புலி அஞ்சுமோ? முத்தமிழ்ப் பகைவரைச் சரண்புக நெஞ்சமோ? -மொழி கயல்புலி வில்லால் காத்தனர் வேந்தர் கண்டவர் நுழைவால் கவிழ்ந்தனர் மாந்தர் அயலவர் ஆட்சி விளைத்திடும் கேட்டை அகற்றிட இங்கே அமைத்திடு பாட்டை -மொழி மானம்உனக் கிலையோ? மனம்வைத்தால் பகைமலையோ? மறவர்குலம் இலையோ? மனம் என்ன சிலையோ? ஈனம்நமக் கல்லவோ? இழித்துலகம் சொல்லவோ? இந்த உயிர் வெல்லமோ? வீரமர பல்லமோ? |