6 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
2 அமிழ்தம் கசக்குமோ? - எடுப்பு தமிழ் வாழ்க என்று சொன்னால் குடிமூழ்கிப் போகுமோ? இங்குத் -தமிழ் தொடுப்பு அமிழ்தம் கசக்குமோ? தென்றல் கொதிக்குமோ? அலறுகிறீர்! கதறுகிறீர்! உமக்கிது அடுக்குமோ? -தமிழ் முடிப்பு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் உண்டீர்! ஆயினும் அந்தோ நன்றியைக் கொன்றீர்! தாயினும் மேலாம் தமிழ்மொழி வாழ்ந்தால் தாக்குமோ? உம்மைச் சாய்க்குமோ? எங்கள் -தமிழ் துறைதொறும் துறைதொறும் வளர்வழி சொன்னால் துடிக்கிறீர்! கண்ணீர் வடிக்கிறீர்! மேலும் மறைவாகச் சூழ்ச்சிகள் செய்கிறீர் இந்நாள் மாதமிழுக் காக்கங்கள் தேடுவதும் எந்நாள்? -தமிழ் |