6 வாய் நோகுமோ? - எடுப்பு வணக்கம் என்று சொன்னால் வாய் நோகுமோ? ஐயா வந்தவர்க்குத்தான் அது தாழ்வாகுமோ? -வணக்கம் தொடுப்பு கணக்கின்றி வந்தவந்த மொழிக்கெல்லாம் பணிகின்றோம் கனிவான மொழியான தமிழாலே துணிவாக -வணக்கம் முடிப்பு பிறமாந்தர் அவர்மொழியே பேசுகின்றார் பிழையாக இங்கேதான் ஏசுகின்றார் மறவேந்தர் காத்தமொழி பேசுதற்கு மனமின்றி அறிவின்றிக் கூசுகின்றார் -வணக்கம் எங்கெங்கும் காணாத காட்சி ஐயா இன்னுமிதை வளரவிடின் வீழ்ச்சி ஐயா அங்கங்குத் தாய்மொழியின் ஆட்சி ஐயா ஆண்டாண்டு ஆண்டமொழி தாழ்ச்சி ஐயா -வணக்கம் |