பக்கம் எண் :

12கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

7
உலகில் ஒரு நூல்!

-

எடுப்பு

ஒருநூல் அது பெருநூல்
உள்ளம் உயர்த்திடும் குறள்நூல்

-ஒருநூல்

தொடுப்பு

வருநூல் அனைத்தும் வாரிவாரிக் கொள்ளும்
திருநூல் பண்பினைத் தருநூல் உலகில்

-ஒருநூல்

முடிப்பு

அகழ்தொறும் அகழ்தொறும் வெளிப்படும் புனல்போல்
பயில்தொறும் பயில்தொறும் அகப்படும் புதுப்பொருள்
புகழ்சொல ஆயிரம் நாவுகள் வேண்டும்
புவியோர் உணர்ந்து போற்றிடல் வேண்டும்

-ஒருநூல்

அறிதொறும் அறிதொறும் மனவளம் மிகுந்திடும்
அகப்பொருள் புறப்பொருள் அனைத்தும் நிறைந்திடும்
அறநெறி வாழ்வினில் திளைத்திடப் புணையாம்
அன்பும் அறிவும் வளர்ந்திடத் துணையாம்

-ஒருநூல்