பக்கம் எண் :

காவியப் பாவை109

காட்டிய எழிலால் கனியது சுவைத்தால்
    கண்களை மூடிடச் செய்திடுமே
ஊட்டிய புனைமொழி உரைத்திடும் உதடுகள்
    உனையே மறுநாள் வைதிடுமே

கூவிடுங் குயிலுங் காகமும் ஒன்றெனக்
    கொள்வது முறையோ சாற்றிடடா
நாவொடு மனமும் ஒன்றிய மாந்தர்
    நல்லுரை கொண்டு போற்றிடடா

புகழ்ந்திடும் மொழியோ இகழ்ந்திடும் மொழியோ
    பொதுப்பணி புரிவோன் ஒன்றெனவே
அகந்தனில் உடையான் புறந்தனில் உடையான்
    அவனே தலைவன் மன்றினிலே