120 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
இயற்கையின் விளைவெனும் உடைமையெலாம் யாவரும் பெறஒரு தடையிலையாம் செயற்கையில் அவைதனி யுடைமையெனில் சிறியவர் செயலது மடைமையுமாம் நலமுற அனைவரும் கூடிடுவோம் நாட்டினில் அமைதியை நாடிடுவோம் மலர்விழி சோலையைத் தேடிடுவோம் மனங்கவர் குயிலெனப் பாடிடுவோம் |