| பாடுங்குயில் (பாடல்கள்) | 121 |
3 தலைமை வகிப்போம் சுரண்டலும் பதுக்கலும் ஒழிப்போம் - அதற்குத் துணைவரும் பகைதனை அழிப்போம் இரண்டிலும் பிழைப்பவர்ப் பழிப்போம் - அவர்க்கே இனியொரு விதிமுறை விதிப்போம் மனிதனை உழைப்பினை மதிப்போம் - கொடிய வறுமையை இடரினை மிதிப்போம் இனியநல் லுலகினைப் படைப்போம் - அங்கே எதிர்வரும் தடைகளை உடைப்போம் உடையவர் எளியவர் இருப்பார் - அதுதான் உலகினில் விதியென வகுப்பார் கடையவர் உயரியர் பிறப்பால் - இருப்பர் கடவுளின் செயலென உரைப்பார் கடவுளை விதியினை மறுப்போம் - தூய கடமையை உரிமையை மதிப்போம் மடமையை அடிமையை வெறுப்போம் - நல்ல மதியினை உணர்வினை வளர்ப்போம் வயல்களில் உழைப்பினைக் கொடுப்போம் - அங்கே வருபயன் அனைத்தையும் எடுப்போம் துயரிலை எனமடல் விடுப்போம் - உழைப்பால் சுரந்திடும் பொருள்களை மடுப்போம் |