122 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
பொறிகளுந் தறிகளும் வளர்ப்போம் - அங்கே புதுநெறி முறைகளில் உழைப்போம் நிறைவுறு பொருள்களை விளைப்போம் - நாட்டின் நிலையுயர் வெய்திடச் செழிப்போம் புதுமுறை உலகினைப் படைப்போம் - அங்கே பொதுமையில் அறநெறி விரிப்போம் உதவிடும் மனத்தொடு சிறப்போம் - உலகில் ஒருசரி நிகரென இருப்போம் அயர்வினைப் பகையெனத் தகர்ப்போம் - நாளும் அவரவர் கடமையை உகப்போம் அயலவர் சுரண்டிடின் செகுப்போம் - அந்த அணியினில் தலைமையை வகிப்போம் |