124 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
விரித்திடும் தோகையின் கண்கள் - காணின் விளைத்திடும் என்மனம் பண்கள் தரித்திடும் ஆடையிற் கண்கள் - காணின் தலைக்கொளும் ஆயிரம் புண்கள் முழுமதி வடிவினில் குறையும் - அதுவும் முழுமையும் ஒருநாள் மறையும் உழுபவன் வடிவினில் குறையின் - என்றன் உளமோ கனலாய்ப் புகையும் பசியுடன் நலிவுகள் மிகுத்தால் - இங்கே பாய்புலி யாய்மனஞ் சினக்கும் இசையா வுலகினைப் படைத்தால் - இனியும் எப்படி என்மனம் பொறுக்கும்? |