| பாடுங்குயில் (பாடல்கள்) | 125 |
5 மூடம் என்று மாறுமோ! கடவுள் கடவுள் என்கிறாய் - நாளுங் கயமை யாவுஞ் செய்கிறாய் மடமை நோக்கிச் செல்கிறாய் - நல்ல மதியை அந்தோ கொல்கிறாய் கல்வி தெய்வம் என்கிறாய் - நாளுங் கற்க என்ன செய்கிறாய்? செல்வந் தெய்வம் என்கிறாய் - அதனைத் தேடத் தீமை செய்கிறாய் சின்னம் உன்றன் மெய்யிலே - செய்யுஞ் செயல்கள் எல்லாம் பொய்யிலே சொன்ன வேதங் கையிலே - வஞ்சம் சூது நெஞ்சப் பையிலே எத்தி வாழப் பார்க்கிறாய் - அதனுள் இறைவன் பேரைச் சேர்க்கிறாய் கொத்துங் கழுகுப் போக்கினால் - உன்றன் கொள்கை நன்மை யாக்குமோ? செய்யுந் தீமை யாவுமே - அந்தத் தேவன் என்றால் தீருமோ? பொய்யும் மெய்ம்மை யாகுமோ? -காட்டுப் பூனை புலியென் றாகுமோ? |