126 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
நூறு நூறு சாதிகள் - இங்கு நுவலுங் கோடி வீதிகள் வேறு வேறு நீதிகள் - சொல்லி வேத மென்றும் ஓதினாய் ஏழை செல்வன் ஏனெனில் - அந்த இறைவன் என்று வீணிலே மோழை வாதங் கூறினாய் - உன்றன் மூடம் என்று மாறுமோ? நெஞ்சின் மாசை ஒட்டுவாய் - நல்ல நினைவை யங்கே கூட்டுவாய் வஞ்சம் நீக்கி வீட்டுவாய் - செய்கை வாய்மை யாக்கிக் காட்டுவாய |