| பாடுங்குயில் (பாடல்கள்) | 127 |
6 நானொரு பாடும் பறவை நானொரு பாடும் பறவை - பொழிவேன் நாடொறும் பாடல் நறவை வானில்வி ரிப்பேன் சிறகை - மறவேன் வாழ்ந்திடும் மண்ணின் உறவை பாடுவ தென்றன் தொழிலாம் - அன்பும் பண்பும் எனதிரு விழியாம் கூடிடும் நட்பெனும் மழையில் - நாளும் குளித்துளம் மகிழ்வதென் வழியாம் சிந்தனை விரிசிற குடையேன் - காற்றுச் சீறிடல் கண்டுளம் உடையேன் முந்திய தமிழிசை நடையில் - கவிதை மொய்ம்புறப் பாடுதல் உடையேன் கொள்கை கொணர்ந்ததை முடைவேன்-அந்தக் கூட்டினில் வந்தே அடைவேன் தெள்ளிய தமிழ்மழை விழைவேன்- என்றும் தித்தித் திடஇசை பொழிவேன் ஈயென் எதிலும் அமரேன் - நறுமலர் எதுவோ அதையே நுகர்வேன் வாயினில் வந்ததை உளறேன்- துன்பம் வாய்த்திடின் அதனால் தனரேன் |