128 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
வாழ்வினைப் பெரிதாக் கருதேன்- என்றும் வாய்மையை மீறித் திரியேன் தாழ்விலுஞ் செம்மைக் குரியேன்-என்றன் தாயகங் காக்குங் குறியேன் விண்மிசை யாண்டுந் திரிவேன்-அங்கே விந்தைகள் ஆயிரம் புரிவேன் மண்மிசை என்றும் வருவேன்-இன்பம் மாநிலம் எய்திடத் தருவேன் பாடிடு வேன்புது வுலகை- அங்கே படைத்திடு வேன்பொது வுடைமை சாடிடு வேன்வரும் படையைத்- தாக்கிச் சமர்புரி வேன்அது கடமை |