130 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
மாந்தனைக் காண்பது சிலநாளே- மனித மாக்களைக் காண்பது பலநாளே ஆய்ந்துளந் தங்குதல் சிலநாளே-மக்கள் ஆகுலம் பொங்குதல் பலநாளே மண்ணில் நடப்பது சிறுநேரம்-நானோ வானிற் பறப்பது நெடுநேரம் நண்ணும் மகிழ்ச்சிகள் சிறுநேரம்-நெஞ்சம் நையுந் தளர்ச்சிகள் நெடுநேரம் வீட்டை நினைப்பது சிறுநேரம்-மனைவி வேட்கை யிருப்பதுஞ் சிறுநேரம் நாட்டை நினைப்பது நெடுநேரம்-கவிதை நயந்து தொடுப்பதும் நெடுநேரம் |