| பாடுங்குயில் (பாடல்கள்) | 131 |
8 ஏங்குதல் நீதியோ? தாயுன தின்னருள் பாடவைத்தாய்-துன்பந் தாக்கிட ஏனுளம் வாடவைத்தாய்? ஆயும் புலமையை நாடவைத்தாய்-அம்மா அப்புறம் ஏன்பொருள் தேடவைத்தாய்? கைப்பொருள் என்னிடம் தங்கவிட்டால்-நெஞ்சிற் காயங்கள் யாவையும் மங்கிவிட்டால் மெய்ப்பொரு ளின்மணம் பொங்கவிட்டே பார்ப்பேன் மேனியில் பாமலர்த் தொங்கலிட்டே விண்ணுல கொன்றனை நான்படைப்பேன்-அங்கே விந்தைகள் ஆயிரம் மேலமைப்பேன் மண்ணுல குய்ந்திடத் தேன்கொடுப்பேன்-இந்த மைந்தனைத் துன்புற ஏன்விடுத்தாய்? மாமயில் போலொரு மங்கையினாள்-நல்ல மாலைச் சுடர்நிகர் செங்கையினாள் காமுறு வேளையின் அங்கவளை-ஏனோ கட்டுற வைத்தனை சங்கிலியால்? கற்பனை வான்மிசை நான்பறப்பேன்- அங்கே காதல் மகள் தரும் தேன்சுவைப்பேன் பொற்புடை யாளவள் தானழைத்தாள்-வானில் போய்வரு மென்சிற கேனறுத்தாய்? |