132 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
இன்ப மெனுங்கடல் பாய்ந்திருப்பேன்-அங்கே எத்தனை எத்தனை ஆய்ந்திருபேன் மன்பதை உய்ந்திட ஈந்திருப்பேன்-நீயேன் வந்தரு ளாமலே ஒய்ந்திருந்தாய்? உன்னை விடுத்தொரு சுற்றமில்லை-நெஞ்சில் ஒட்டிய வேறொரு பற்றுமில்லை என்னைப் புரப்பதில் குற்றமில்லை-அம்மா ஏங்குதல் நீதியோ பெற்றபிள்ளை? |